திருகோணமலை அருள்மிகு பத்தரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஞாயிற்றுகிழமை ( 13.03.2016 ) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து அடுத்து வரும் பத்து தினங்கள் உற்சவம் நடைபெறும். ஒவ்வொரு உற்சவத்தினையும் ஒவ்வொரு அடியவர்கள் சிறப்பிப்பார்கள்.
அந்த வரிசையில் நேற்றைய தினமான வியாழக்கிழமை ( 17.03.2016 ) 5ம் திருவிழா நடைபெற்றது. அதனை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினர் செயற்படுத்தியிருந்தனர். அம்பாள் பிள்ளையார் , முருகன் சகிதம் மஞ்சம் வாகனத்தில் வலம் வந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 22.03.2016 தேர்த்திருவிழா இடம்பெற இருப்பதுடன் மறுநாள் புதன் கிழமை ( 23.03.2016 ) காலை 6.00 மணிக்கு சமத்திரா தீர்த்த உற்சவமும் நடைபெற உள்ளது.

Post a Comment