மாகாண முதலமைச்சர்கள் நாளை தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில்
மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள்
இடம்பெற்றுள்ளதாக மாகாண முதலமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நிதி ஒதுக்கீடுகள் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் நேற்று ஜனாதிபதிக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.
நாளைய சந்திப்பின் போது ஜனாதிபதி தீர்வு குறித்து அறிவிப்பார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மாகாணசபைகளுக்கு மத்திய அரசாங்கம் நேரகடியாக நிதியை வழங்கி வந்ததாகவும், இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைகளுக்கு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள்
அமைச்சின் ஊடாக நிதி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்மானத்திற்கு சகல மாகாண முதலமைச்சர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment