அம்பாறை
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 4 கிராம சேவகர்
பிரிவில் நேற்று (27) ஞாயிறு மாலை 4மணியளவில் திடீரென வீசிய மினி
சூறாவளியால் வீடுகள் ,கடைகள் சேதமடைந்துள்ளன.இவ்வாறு திடீரென வீசிய மினி சூறாவளியால் விநாயகபுரம் சிவன் ஆலயத்திற்கு முன்பாக செல்லும் வீதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களில் 2வீடுகள், ஒரு கடையும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடை உட்பட 2வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வாழைகள், தென்னைமரங்கள் மற்றும் மரங்களும் காற்றினால் முறித்து எறியப்பட்டுள்ளது.
இவ் அனர்த்தம் தொடர்பாக உடனடியாக திருக்கோவில் பிரதேச செயலாளருக்கு கிராம சேவகர் அறியப்படுத்தியதுடன் பிரதேச செயலாளர் அம்பாறை அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் சம்பவ இடத்தினை பார்வையிட அனர்த்த முகாமைத்து அதிகாரிகள் வருகைதரவுள்ளதாகவும் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்துள்ளார்.
இவ் மினி சூறாவளி பாரிய சத்தத்துடன் காற்று மேலெழுந்து சுமார் 150 அடிக்கு மேல் வீட்டில் கூரைகளை அள்ளி வீசியதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வீதிகளி நிற்பதை காணக்கூடியதாக இருந்ததுடன் இந்த அனர்த்தத்தில் மூன்று ஆண்கள் காயமடைந்து திருக்கோவில் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி கிராம சேவகர் தெரிவித்துள்ளார்.
Post a Comment