( செய்தியாளர் - மூலையூரான் )இலங்கையில் வரலாற்று சிறப்புமிகு இடமாக விளங்கும் வந்தாறுமூலை அம்பலத்தடியில் உள்ள கி.மு 2ம் நூற்றாண்டிற்கு உரித்தான தமிழ்
கல்வெட்டுக்களை பாதுகாக்கும் நோக்கில் வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அக் கல்வெட்டுக்களை மையப்படுத்தி உழவர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையானது கிராம அபிவிருத்திச் சங்கம், ஊர் இளைஞர்கள், கோயில் தலைவர் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடி அக் கல்வெட்டை பேணும் நோக்கிலும், சிலையை அமைப்பதன் நோக்கிலும் நடாத்தப்பட்ட ஆரம்ப அடிக்கல் நடும் நிகழ்வு 12.12.2015 பி.ப 4.30 மணியளவில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் (அமல்) அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .













Post a Comment