0
வாழைச்சேனை புதுக்குயிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பாற்குட பவனியும் 1008 ஸஹஸ்ர சங்காபிஷேகம் நடைபெற்றது.
வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று அங்கிருந்து ஐநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் தலைமையில் பாற்குட மேந்தி வாழைச்சேனை பிரதான வீதி, விபுலானந்த வீதி, பேத்தாழை முருகன் ஆலய வீதி வழியாக வந்து முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கிருந்து புதுக்குயிருப்பு கண்ணகியம்மன் ஆலயம் சென்று பின்னர் ஆலயத்தை சென்றடைந்தது.
இதன்;போது ஆலயத்தில் யாக பூசைகள் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம், பாலாபிஷேகம், 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று பின்னர் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று அம்பாள் உள் வீதி வலம் வருகை தந்து பூசைகள் யாவும் நிறைவு பெற்றது.
ஆலய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்பூசைகள் யாவும் பிரதிஷ்டா வித்தகர் கிரியாக்கிரம ஜோதி ப்ரம்மஸ்ரீ.இலஷ்மிகாந்த ஜெகதீசக் குருக்கள் மற்றும் ஆலய குரு கிரியாதிலகம் சிவஸ்ரீ.ந.முரசொலிமாறன் குருக்கள் ஆகியோரால் நடைபெற்றது.
பூசைகள் யாவும் நிறைவு பெற்றதும் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.









Post a Comment

 
Top