நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் 73 நீர்தேக்கங்களின் 11 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இன்று நாட்டின் அதிகமான பிரதேசங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளதோடு ஏற்கனவே அதி கூடிய மழை பெய்து வருகின்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற 73 நீர்த்தேக்கங்களின் 11 வான் கதவுகளே இவ்வாறு திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் அதிகாரி எஸ். மோகனராஜா அறிவித்துள்ளார்.
மேலும் காலநிலை மத்திய நிலையத்தின் தகவல்களின் படி இன்று அதிகமான பிரதேசங்களில் 150 மி.மீற்றருக்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 70-80 க்கு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment