0
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
பாகிஸ்தான்– இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நேற்று நடந்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது.
வீன்ஸ் 46 ஓட்டங்களூம், வோக்ஸ் 24 பந்தில் 37 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோரூட் 32 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில், சோகைல் தன்வீர், அப்ரிடி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் 155 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.
இருப்பினும் மறுமுனையில் இருந்த சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்து சென்றார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது வோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சேயிப் மாலிக் 1 ஓட்டம் எடுத்தார்
2வது பந்தில் சோகைல் தன்வீர் சிக்சர் அடித்து அசத்தினார். 3வது பந்தில் ஓட்டங்கள் ஏதுமில்லை. 4வது பந்தில் 1 ஓட்டம் எடுக்கப்பட்டது.
கடைசி 2 பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 5வது பந்தில் சோயிப் மாலிக் ஆட்டம் இழந்தார்.
இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு ஓட்டமே எடுக்கப்பட்டதால் பரபரப்பான இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது.
சோயிப் மாலிக் 54 பந்தில் 75 ஓட்டங்களும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), அப்ரிடி 20 பந்தில் 29 ஓட்டங்களும் (3 சிக்சர்) எடுத்தனர். இங்கிலாந்து சார்பில், டேவிட் வில்லி 3 விக்கெட் கைப்பற்றினார்.
போட்டி சமநிலையில் முடிந்ததால் வெற்றி– தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அப்ரிடியும், உமர் அக்மலும் துடுப்பெடுத்தாடினர்.
இங்கிலாந்து வீரர் ஜோர்டான் சூப்பர் ஓவரை சிறப்பாக வீசினார். இதனால் பாகிஸ்தான் அணியால் 3 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து எளிதில் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 3-0 என "ஹாட்ரிக்" வெற்றி பெற்று பாகிஸ்தானை ‘ஒயிட்வாஷ்’ செய்தது
முன்னதாக நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2–0 என்ற கணக்கில் வென்று இருந்தது.




Post a Comment

 
Top