0
Re-publishing

(செய்தியாளர்  தமிழ்வேலன்
24.10.2015 நடைபெற்ற மாருதி பாலர் பாடசாலையின் கலைவிழா  நிகழ்வில்  ஆரம்பத்தில் அதிதிகள் மாணவர்களின் பாண்ட் வாத்திய அணியினரால் வரவேற்க்கப்பட்டதும் திரு..அன்ரனி பொன்சேகா  தலைமையில்   மங்கள விளக்கேற்றத்துடன்  நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மாருதி பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் மற்றும் அவர்களின் ஆக்கச் பூர்வமான    செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாகவும் மற்றும் சிறுவர்கள் இளம் பிராயத்திலேயே திறமைகளையும் அடிப்படையில் ஆன்மிகத்தையும் ஊட்டி வளர்க்கவேண்டும் எனவும்
மேலும் பெற்றோர் இதில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும்  எனவும்  நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகள் தங்களின் உரையில் தெரிவித்திருந்தனர்.

கலை விழாவில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும்    நிகழ்வின்  நிறைவில் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும்  நிழ்கவுக்கு வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது 

நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  திரு.இரா.துரைரெட்ணம் , கௌரவ அதிதிகளாக நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு.ஜி .எஸ் .சுரேஷ் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் திரு. .கந்தசாமி   மற்றும் சிறப்பு அதிதிகள் மாணவர்களின் பெற்றோர் என பலர்     கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
                  
















Post a Comment

 
Top