வாழைச்சேனை
பொலிஸ் பிரிவில் மீள்குடியேற்ற பிரதேசமான கேணிநகர் பிரதேசத்தில் பிறந்து ஒரு நாளேயான
ஆண் சிசுவொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டு
வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
திப்புட்டுமுன தெரிவித்தார்.
மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் கேணிநகர்
கிராமத்தில் உள்ள வாழைச்சேனையைச் சேர்ந்த
ஒருவருக்கு சொந்தமான தோட்டத்திலயே இக் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவருவதாவது,
நேற்று காலை தோட்ட உரிமையாளர்
தனது குடும்பத்துடன் தனது தோட்டத்திற்குச் சென்ற
போது தனது தோட்டத்தில் உள்ள
குடிசைக்கு முன்னாள் குழந்தை கைவிடப்பட்ட நிலையில்
கிடந்ததை கண்டு வாழச்சேனை பொலிஸாருக்கு
தெரியப்படுத்தியதைடுத்து பொலிஸார் குழந்தையை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

Post a Comment