0
வவுனியாவில் பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கு எதிராக அமைதிப் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது.
'பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்து கிராமிய பெண்கள் அமைப்பினால் இப் பேரணி நடத்தப்பட்டது.
வவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதி ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான உரிமைகள் அடங்கிய வாசகங்களை தாங்கிய பதாதைகளுடன் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் வீதி வழியாக வவுனியா பிரதேச செயலகத்தை அடைந்த இப் பேரணியில் ஈடுபட்டோர் வவுனியா பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

பெண்கள், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும், கணவனை இழந்த இளம் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் தீர்வு கிடைக்கவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரே இதன்போது கையளிக்கப்பட்டது.

Post a Comment

 
Top