0

 தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தரை வழிப்பாதை துண்டிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்தில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஏற்பாட்டில் நேற்று இலவச மருத்துவச் சேவை இடம் பெற்றது.

மன்னார் கற்கிடந்த குளம் புனித சிலுவை அருட்சகோதரிகளின் மருத்துவ  உதவியுடன் இடம் பெற்ற குறித்த இலவச மருத்துவச் சேவையில் முசலி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன் சாள்ஸ் அவர்களும் கலந்து கொண்டார். இதன் போது குஞ்சுக்குளம்,மாதா கிராமம்,பெரிய முறிப்பு  ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள்,வயோதிபர்கள்,பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.

தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக குஞ்சுக்குளத்திற்கு செல்லும் பிரதான தரை வழிப்பாதைகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் அக்கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.இந்த நிலையில் அரிப்பிற்கு செல்லும் மாற்றுப்பாதையூடாக சென்று குஞ்சுக்குளம் கிராமத்தை சென்று குறித்த இலவச மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top