0



( செய்தியாளர் - மூலையூரான் ) இந்துக்கள் அனுஷ்டிக்கும் விரதங்களில் சிறப்புமிகு விரதமாக கொள்ளப்படும் கேதாரகௌரி  விரதாமானது வரலாற்று சிறப்பு  மிக்க  வந்தாறுமூலை மகா விஷ்ணு  ஆலயத்தில் மிக சிறப்பனமுறையில் இடம்பெற்றது.

இவ் விரதமானது 21 நாள் விரதமிருந்து இறுதிநாளான அன்று உபவாசம் இருந்து ஆலயத்துக்கு சென்று   கையில் காப்பணிந்து
மறுநாள் பாரணை செய்தல்  அதாவது  இலைபோடுதல் வழக்கமாகும்.
 
நேற்று 10.11.2015 காலை 07.00 மணிக்கு லிங்க அபிசேகம்  இடம்பெற்று அதனைத்தொடர்ந்து  11.30 மணியளவில் பூஜைகள்     ஆரம்பிக்கப்பட்டு  விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு  திருக்காப்பு அணியப்பட்டு     பி.ப 03.30 மணியளவில்   இனிதே நிறைவு   பெற்றது.

இப் பூஜையில்  300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.    








Post a Comment

 
Top