வடகிழக்கில் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை நவீன மயப்படுத்தி அதன்மூலம் பொதுமக்கள் சிறந்த பயனை அடையும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன்கீழ் மட்டக்களப்பு மற்றும் யாழ் மாநகரசபைகளை டிஜிட்டல் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஆசிய பவுண்டேசனின் உதவியுடன் இரண்டு மாநகரசபைகளும் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட அனைத்து விடயங்களையும் டிஜிட்டல் படுத்தி அவற்றின் ஊடாக பொதுமக்களுக்கு சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் இரண்டு மாநகரசபையிலும் தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான இரண்டு தினங்கள் கொண்ட பயிற்சி வகுப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிரைவுரையாளர் நிமாலிகா பெர்னாண்டோ தலைமையிலான விரிவுரையாளர்கள் இது தொடர்பான பயிற்சியை வழங்கிவருகின்றனர்.
இதனை இலகுபடுவத்துவதற்காகவும் நவீன தொழில்நுட்பத்தில் தரவுகளை சேரிக்கவும் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகளை இந்த தரவு பதிவதற்குள் உட்படுத்தவுள்ளோம்.இதன்மூலம் மக்கள் இலகுவில் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும். தரவுகள் சரியான முறையில் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த திட்டமிடல்களை மேற்கொள்ளமுடியும்.அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கக்கூடியதாக இருக்கும்.
Post a Comment