மட்டக்களப்பு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச்சேர்ந்த ஜங் ப்ரண்ஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் முஹம்மது றிகாஷ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் பாராளுமன்றமானது இம்முறை தொகுதிவாரி அடிப்படையில் 07.11.2015 அன்று நாடுபூராகவும் இடம்பெற்றது.தொகுதி வாரியாக நடாத்தப்பட்ட இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு முஸ்லிம் இளைஞருக்கு பாராளுமன்ற உறுப்பினர் நிலை கிடைக்காமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுவந்தது. நாடளாவிய ரீதியில் நடந்த தொகுதிவாரியான தேர்தலில் 160 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், நேர்முகத்தேர்வு மூலம் 65 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
அதன்பிரகாரம் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் ஏறாவூரைச் சேர்ந்த ஜங் ப்ரண்ஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் முஹம்மது றிகாஷ் இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் தகவல் தொழிநுட்ப முகாமைத்துவ மூன்றாம் வருட மாணவன் ஆவார். அவர் பல சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு இளைஞர்
பாராளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச்சேர்ந்த ஜங் ப்ரண்ஸ் இளைஞர் கழகத்தின்
தலைவர் முஹம்மது றிகாஷ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் பாராளுமன்றமானது இம்முறை தொகுதிவாரி அடிப்படையில் 07.11.2015 அன்று
நாடுபூராகவும் இடம்பெற்றது.
தொகுதி வாரியாக நடாத்தப்பட்ட இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
மூன்று தொகுதிகளிலும் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு
முஸ்லிம் இளைஞருக்கு பாராளுமன்ற உறுப்பினர் நிலை கிடைக்காமை தொடர்பில் கவலை
தெரிவிக்கப்பட்டுவந்தது.
நாடளாவிய ரீதியில் நடந்த தொகுதிவாரியான தேர்தலில் 160 உறுப்பினர்கள்
தெரிவுசெய்யப்பட்ட நிலையில், நேர்முகத்தேர்வு மூலம் 65 உறுப்பினர்கள்
தெரிவுசெய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
அதன்பிரகாரம் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் ஏறாவூரைச் சேர்ந்த ஜங் ப்ரண்ஸ்
இளைஞர் கழகத்தின் தலைவர் முஹம்மது றிகாஷ் இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
இவர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் தகவல்
தொழிநுட்ப முகாமைத்துவ மூன்றாம் வருட மாணவன் ஆவார். அவர் பல சமூக சேவையில்
ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Read more at: http://www.battinews.lk/2015/11/blog-post_210.html#more
Copyright © www.battinews.lk
Read more at: http://www.battinews.lk/2015/11/blog-post_210.html#more
Copyright © www.battinews.lk
Post a Comment