0
( செய்தியாளர் - மூலையூரான் )
கிழக்கின் திருப்பதியாக விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வருடாவருடம்  இடம்பெறுகின்ற விஷ்ணுவாலய தீபத்திருநாள் இவ்வருடமும் ஆலய  நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

 ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திரக்குருக்கள், உதவிக்குருக்களான பண்டரிநாத்,கிரிடாங்கன்,பவித்திரன் அவர்களினால்   பூஜை நிகழ்வானது 26.11.2015 சரியாக 05.30 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு ,மூலமூர்த்தியான விஷ்ணு பகவானுக்கு விசேட திரவிய  அபிசேகங்கள்,ஆராதணைகள்  இடம்பெற்றது .
அதனைத்தொடர்ந்து 06.00 மணியளவில் சொக்கப்பனைமரம்  எரிக்கப்பட்டு இறுதியாக பிரசாதம் வழங்கப்பட்டு இந் நிகழ்வானது 07.00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

இவ் விஷ்ணுவாலய  தீபமானது பிரம்மா,விஷ்ணு அடிமுடி தேடிய வரலாற்றினை எடுத்துக்காட்டும் முகமாக இடம்பெறுகிறது .

அத்தோடு ஆலய உள் வீதி வெளிவீதி என்பன தீபங்களினால் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



















Post a Comment

 
Top