( செய்தியாளர் - மூலையூரான் )
இளைஞர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என கல்குடா தொகுதி இளைஞர் பாராளுமன்ற வேட்பாளரும் சமூகசேவகரும், சிறந்த விளையாட்டு வீரரும், அறிவிப்பாளரும் ,BA பட்டதாரியுமான சுந்தரலிங்கம் சுதாகரன் எமது ஊடகத்துக்கு தெரிவித்தார்.
அவர் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் குறித்து தெரிவிக்கையில் எமது நாட்டில் இம் முறை 3வது தடவையாக இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இடம் பெறுகின்றது. கடந்த 28ஆம் திகதி இளைஞர் பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு நாடு பூராகவும் இடம் பெற்றதுடன் எதிர்வரும் 07ஆம் திகதி தேர்தல் நடை பெறவுள்ளது.
கடந்த வருடம் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து இளைஞர் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இம்முறை தொகுதிவாரி முறையை புதிய அரசு அறிமுகம் செய்துள்ளது
எமது கல்குடா தொகுதி இளைஞர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் நான் போட்டியிடுகின்றேன். இதில் வெற்றி பெற கூடிய சாத்தியம் எமக்கு அதிகம் காணப்படுகின்றது.
அத்தோடு நான் வெற்றி பெற்றபின் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டலை மேற்கொள்வேன், கிராமிய இளைஞர் கழகங்களை வலுவூட்டுவேன்,கிராம மட்டத்தில் இளைஞர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவேன்,இளைஞர்களின் கல்வி மட்டத்தை உயர்த்த வழிசெய்வேன், இளைஞர் கழகங்களுக்கு தரமான விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொடுப்பேன், தேசிய சர்வதேச நிகழ்வுகளில் இளைஞர்கள் பங்குகொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பேன் என உறுதியாக பல விடயங்களை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் அன்புமிக்க இளைஞர் யுவதிகளே எமது இலக்கை அடைய எனது இலக்கமான 03ம் இலக்கத்திற்கு புள்ளடி இட்டு வெற்றி பெறச் செய்விர்கள் என நம்புகிறேன்.

Post a Comment