0
வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ர பாடசாலையின் கட்டட திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் க.அனந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரி நா.குணலிங்கம், கறுவாக்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.முத்துமாதவன், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். உலக வங்கியின் நாற்பது இலட்சம் ரூபாய் நிதி உதவியில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. பாடசாலைக்கு மேலதிகமான கட்டடங்கள் தேவைப்படுவதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், மழை காலங்களில் பாடசாலை நீரில் மூழ்குவதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும் வித்தியாலய அதிபர் க.அனந்தராஜா தெரிவித்தார்.

Read more at: http://www.battinews.lk/2015/11/blog-post_13.html
Copyright © www.battinews.lk






Post a Comment

 
Top