0
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசுமரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணரும், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

 இதில் 201 சிசுமரணங்கள் பிரசர அறைகளில் இடம்பெற்றுள்ளதாகவும், ஏனைய மரணங்கள் மகப்பேற்று விடுதிகளில் இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு 46 சிசுமரணங்களும், 2012ஆம் ஆண்டு 54 சிசுமரணங்களும், 2013ஆம் ஆண்டு 60 சிசுமரணங்களும், கடந்த ஆண்டு 41 சிசுமரணங்களும் வைத்தியசாலை மகப்பேற்று  விடுதிகளில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

Post a Comment

 
Top