தென் இந்தியக் கலைஞர்களால் எம்நாட்டுக் கலைஞர்களை கௌரவிக்கும் மாபெரும் விருது வழங்கல் விழா ''இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக'' இரண்டாவது முறையாக மட்டக்களப்பு தேவநாயகம் அரங்கில் நேற்று (21) சனிக்கிழமை மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வேல்ஸ் டான்ஸ் ஸ்டுடியோவின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியாக உள்ள கலைஞர்களை விருதுவழங்கி கௌரவிக்கும் வேல்ஸ் விருது - 2015 விழாவிற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் கலந்துகொண்ட நிகழ்வில் கௌரவ அதிதிகளாக எச்.என்.வீ. முகாமையாளர் பீ.ரமணதாச மற்றும் தென்னிந்திய கலைஞர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின்போது அகில இலங்கை ரீதியாக குறுந்திரைப்பட கலைஞர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு இந்தியாவில் இருந்து வருகைதந்த தென்னிந்திய கலைஞர்களுக்கும் வேல்ஸ் விருது வழங்கும் விழாக் குழுவினரினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment