0
(திருப்பாவை பூஜை புகைப்படம் இணைப்பு)
பழையதை விலக்கி புதியதை ஏற்ற இவ் வருடமானது மிகவும் சிறப்பாக மலர்ந்துள்ளது அந்தவகையில் வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வருடாவருடம்  இடம்பெறும் திருப்பாவை பூஜையில் 01.01.2017   புதுவருடத்தை முன்னிட்டு  ஆலய பிரதம குரு அவர்களின் நற்சிந்தனையை தொடர்ந்து  கண்ணன் பஜனை குழு மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்களும் குடும்பப்பொறுப்பை ஒரு தலைமையில் வழிநடத்தும் குடும்பத்திலிருந்து ஒருநபர் வீதம் தலா 1000/- ரூபாய் வங்கி வைப்பு புத்தகமும் வழங்கிவைக்கப்பட்டது.

கண்ணன் பஜனை குழுத்தலைவர் தா.வடிவேல் அவர்களின்   ஏற்பாட்டில் அன்றயதின பூஜை உபயகாரர்களான திரு.த.சீவரெத்தினம் குடும்பம் கமலன் தேவி ஆகியோரால் அன்பளிப்புக்கள் அனைத்தும்  வழங்கப்பட்டது.

இதில் ஆலய பிரதம  குரு சாட்சிநாத தேய்வேந்திர குருக்கள் அவர்களாலும் ஆலய நிருபாக சபை உறுப்பினர்களாலும் மற்றும் பலராலும் மேற்படி  கண்ணன் பஜனை குழு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் மற்றும் வங்கி வைப்பு புத்தகம் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பாவை  பூஜையில் கலந்துகொண்ட அடியவர்கள் ஆலய நிருபாக உறுப்பினர்கள்  மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பஜனைக் குழு தலைவர் தா.வடிவேல் அவர்கள்  தெரிவிக்கையில்  இதுபோன்ற நற்பணிகளை வளர்ந்துவரும் இளம் பிராயத்தினைரை ஊக்கமளிக்கும் வகையில் அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம் எனவும் பங்களிப்பை வழங்க முன்வாருங்கள் எனவும் இப் பங்களிப்பை அன்பளிப்புச் செய்த திரு.த.சீவரெத்தினம் கமலன் தேவி அவர்களின் குடும்பத்தினருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்திக்கொண்டு கண்ணன் பஜனை குழு சார்பாகவும் நன்றிகளையும் அனைவருக்கும்  புதுவருட நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.














Post a Comment

 
Top