0
மட்டக்களப்பு வந்தாறுமூலையில்  கிழக்கின் திருப்பதியாக விளங்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் பரமபதம் அடையும் வைகுண்ட ஏகாதசி விரதமானது இம்முறையும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

08.01.2017 சங்கள்ப நிகழ்வோடு ஆரம்பமாகி  அன்றைய தினம் பகல் பூஜைகள் முடிவுற்றதும் விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களின் நலன் கருதி ஆலய நிருபாக சபையின் ஏற்பாட்டில்   அன்றைய இரவு பூஜைகள் மற்றும் நிகழ்வுகள்  ஆரம்பமாகின பி.ப 4.30 மணியளவில் கண்ணன் பஜனை குழு மாணவர்களின் பஜனைகள் இடம்பெற
தொடர்ந்து முதலாம் சாம பூஜைகள் ஆரம்பமாகி நிறைவுற்றதும் அலங்கரிக்கப்பாட்ட கண்ணன் அரங்கில் கலைகலாசார நிகழ்வாக மங்களவிளக்கேற்றல், ஆலய பிரதம குரு ஆசியுரை , வரவேற்ப்பு நடனம் ,கிருஷ்ண லீலா இரண்டாம் சாம பூஜை தொடர்ந்து கலைநிகழ்வு  நாடகம் குழு நடனம், கட்டுரைகள்,  கதைகள், முன்றாம் சாமபூஜை சரியாக 12.00 மணிக்கு பரமபதமடையும் வைகுண்ட கதவு திறக்கப்பட்டு பகவான் விஷ்ணுவிற்கு விசேட பூஜைகளும் இடம்பெற்றது.

தொடர்ந்து கண்ணன் அரங்கில்  ஹரி கதா, மற்றும் பக்திபரவசம் சொட்டும் பக்தி காணொளிகள் இடம்பெற்று.
மறுநாள்  09.01.2017 அதிகாலை நான்காம் சாம பூஜைகள் நிறைவுபெற்றதும்  தீர்த்த உற்சவம் இடம்பெற்று   விரதமானது நிறைவெய்தியது.

விரதங்களில் மகிமைமிகு விரதமாக கொள்ளப்படும் பரமபதமடையும் வைகுண்ட ஏகாதசி விரதத்தில்   பல பாகங்களிருந்தும்  பல அடியவர்கள் கலந்துகொண்டனர் அத்தோடு இந்நிகழ்வில் வந்தாறுமூலையை சேர்ந்த கிழக்கு மாகாண சபை  கால்நடை மற்றும்    விவசாயத்துறை மாகாண சபை  அமைச்சர் கி.துரைராசசிங்கம்  ஐயா அவர்கள் பூஜைகளில்  கலந்துகொண்டதோடு ஆன்மீகசொற்பொழிவு ஆற்றி  கலை நிகழ்வுகளிலும்  கொண்டமை  குறிப்பிடத்தக்கது.



























.

Post a Comment

 
Top