மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக சமய தொண்டு எனும் பெயரில் தமிழ் மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஸ்ரீ மங்கள ராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர். பிக்கு எனும் போர்வையில் அடாவடித்தனம் செய்து வருகின்றார்.
உலக மக்களால் கௌரவமாகப் போற்றப்படும் பௌத்த மதத்திற்கும் அதன் மகத்துவத்திற்கும் துளி கூட பொருத்தமில்லாத மிகக் கேவலமான செயற்பாடுகளையும், இன நல்லுறவை சிதைக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பிரதேச செயலாளரின் அழைப்பிதல் இன்றி கூட்டங்களில் கலந்து கொண்டு குழப்பங்களை மேற்கொள்வதற்கும்., அத்துமீறி தமிழர்களுக்கே உரித்தான காணிகளை கபளிகரம் செய்வதற்கும்., அரச அதிகாரிகளின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கும் இத்தகைய காடையர்களுக்கு அணுமதியளித்தது யார்.?
நல்லாட்சி மலர்ந்தும் இத்தகைய இனவாதிகளின் செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றதா.? என எண்ணத் தோன்றுகிறது.
இத்தகைய வன்முறையான செயற்பாடுகளால் அரச அதிகாரிகள் கடமைக்குச் செல்ல அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அண்மைக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை., தொடர்ந்து கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத மர கடத்தலை தடுக்க முற்பட்ட கிராம சேவகரை இராணுவ அதிகாரிகள் தாக்கியமை போன்றவை சான்றுகளாகும்.
இது ஒருபுறமிருக்க இப்பிக்குவின் இத்தகைய செயற்பாடுகள் இன்று நேற்று அல்ல பல காலமாக திட்டமிட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து., அவர்களை தாக்குவதும்., மிக கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி வசைபாடுவதும். இவரது வழக்கமான செயற்பாடுகளாகிவிட்டன.
சிலவருடங்களுக்கு முன்னர் மின்சாரசபை ஊழியர் ஒருவரை தாக்கியமை, பெண் பொலிஸ் உத்தியோகத்தரை அவதூறாகப் பேசி தாக்க முற்பட்டமை, அண்மையில் விமான நிலைய திறப்பு விழாவிற்கென, ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு வருகை தந்த போது மங்கள ராமய விகாரைக்கு வரவில்லை என நினைவுப் படிகத்தையும் உடைத்தெறிந்தார். இத்தகைய அடாவடித்தனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
இனியும் தமிழ் மக்களாகிய நாம் மௌனமாக இருக்க முடியாது ஆகவே
இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட கிராம சேவகருடனும், பிரதேச செயலாளருடனும் பேசியுள்ளேன்.நாம் என்றுமே மக்களோடு மக்களாக இருப்பவர்கள். பாராளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இடம்பெற்றமையால் இச் சம்பவம் தொடர்பாக எம்மால் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும் முறைப்பாட்டைப் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
அதுமட்டுமன்றி சம்பவம் தொடர்பில் ஆரம்பத்திலேயே நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாது வேடிக்கை பார்த்திருந்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதுடன். இனியும்
இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாமல் தடுப்பதற்கு, உடனடியாக எமது எதிர்கட்சித் தலைவர் சம்மந்தன் ஐயாவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன், தொடர்ந்து கௌரவ ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் உள்ளோம்.
அத்துடன் இப்படிப்பட்ட பிக்குவின் செயற்பாடுகள் தொடர்பில், புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவர்களிடம் பாராளுமன்றத்தில் நேரடி வினா எழுப்புவதற்குமான
சகல நடவடிக்கைகளையும் விரைவாகவும், விவேகமாகவும் மேற்கொண்டிருக்கின்றோம்.

Post a Comment