0
மட்டக்களப்பு மேற்கு வலய கித்துல் ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு மற்றும் சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் நேற்று(11.11.2016) அதிபர் என்.ஜெயராணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .

இதற்க்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்திருந்தார்.மேலும் வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியநாதன்,ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பு உறுப்பினர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,ஆலயத்தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.புலமைப்பரிசு பரீட்சையில் வெட்டுப்புள்ளி 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளி அமைப்பினால் கற்றல் உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் பல கலை நிகழ்வுகள்,உரைகள்,வினோதமான விளையாட்டு நிகழ்வுகள் என பல விடயங்கள் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.









Post a Comment

 
Top