0
மட்டகளப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராமசேவையாளர்கள் பதாகைகளை ஏந்தியவாறு இன்று(16.11.2016) கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மங்ளராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் அண்மைக்கால செயற்பாடுகளைக் கண்டித்துதே மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிராம உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச காணியை ஆக்கிரமிப்பது மதகுருவா? கிராம உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புத்த பிக்குவை கைது செய்ய வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தியபடி கிராமசேவையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் 14 பிரதேச செயலகங்களின் முன்னால் புத்த பிக்குவை கைது செய்யக் கோரி கிராமசேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமை புரியும் உத்தியோகஸ்தர்கள் அரச திணைக்களங்களின் உத்தியோகஸ்தர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top