0
(செய்தியாளர்-மூலையூரான்)
சிறப்புமிகு கார்த்திகை மாதமான தாமோதர மாதத்தை முன்னிட்டு வந்தாறுமூலை மஹா விஷ்ணு ஆலய நிர்வாகம்,வந்தாறுமூலை இந்து இளைஞர் மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரால்
உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் தாமோதர மாத நகர் சங்கீர்த்தனப் பெருவிழா  கிழக்கின் திருப்பதியாக விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் 11.11.2016 வெள்ளிக்கிழமை பி.ப.04.00மணிக்கு இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் முதல் நிகழ்வாக நகர் சங்கீர்த்தனம் மகா விஷ்ணு ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வீசி வீதி வழியாக சென்று பெரியதம்பிரான் வீதி ஊடாக களுவன்கேணி வீதி,பிரதான வீதியை அடைந்து ஆலையடி வீதி,உப்போடை வீதி ஊடாக அம்பலத்தடியை அடைந்து அக்கிருந்து பிரதான வீதி ஊடாக வேக்கவுஸ் வீதி,கிருஷ்ணன் கோவில் வீதி ஊடாக ஆலயத்தை சென்றடையவுள்ளது.

அதனை தொடர்ந்து மஹா விஷ்ணு ஆலய கண்ணன் அரங்கில் பகவத்கீதை சொற்பொழிவு ,தாமோதராஷ்டக ஆராத்தி பூஜை, பஜனை மற்றும் பிரசாதம் என்பன இடம்பெறவுள்ளது.

எனவே தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் கலந்துகொண்டு எல்லாம் வல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய தரிசனம் பெற்றேகுமாறு அன்புடன் உளம் உவர்ந்து அழைக்கின்றோம்.

ஊடக அனுசரனை www.vishnufm.com

அன்னை யசோதையினால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உரலில் கட்டப்பட்டு மரங்களாக இருந்த நளகூவரன் மற்றும் மணிக்ரீவன் எனும் இரு தேவர்களுக்கும் சாபவிமோசனம் கொடுத்து நிகழ்த்திய லீலையின் மாதமே கார்த்திகை அல்லது தாமோதர மாதமென்று அழைக்கப்படுகிறது. இப் புனித தாமோதர மாதத்தில் நாம் அவரின் நாமம் ரூபத்தில் நிலைத்திருந்தால் அன்னை யசோதையின் மகனான குழந்தை கிருஷ்ணர் அவரின் அபரவிதமான கருணையை நமக்கும் அவர் அளிப்பார்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
தினமும் உச்சரியுங்கள் வாழ்வு புனிதமடையும்.


Post a Comment

 
Top