முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாம் பாவனையிலிருந்து விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து மனித எச்சங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், குறித்த காணியில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை என்னால் நேரில் அவதானிக்ககூடியதாக இருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீசிறிநேசன் தெரிவித்தார்.
இன்றைய தினம் சம்பவ இடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீசிறிநேசன் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முறக்கொட்டான்சேனைப் பகுதியில் வீடுகளில் இருந்த சுமார் 15 பேர் சித்தாண்டி முருகன் கோயிலடியில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள்.
கோயிலடியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் இந்த இராணுவ முகாமிற்கு கொண்டுவரப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முருகன் கோயிலடியில் வைத்து கைது செய்யப்பட்ட 15 பேரும் இதுவரைகாலமும் வீடு திரும்பவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் 15 வயது மாணவனும் அடங்குவதாக தெரிவித்தனர்.
மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் காணிக்குரியவர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் என மூன்றுபேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இடத்தில் வெளிவரும் எழும்புத்துண்டுகள், அன்று கைது செய்யப்பட்டவர்கள் கொல்லப்பட்டு இவ்விடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்வைத்துள்ளனர்.
கோயிலடியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கிடைக்காத இடத்தில் அவர்கள் நினைக்கின்ற சந்தேகமும் கூட நியாயப்படுத்தகக்கூடிய விதத்தில் இருக்கின்றது.
மேலும் 79 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டபோதும், இன்னும் 29 பேருக்கான வீடுகளுக்குரிய நிலங்கள் கொடுக்கப்படாமல் குறித்த முறக்கொட்டான்சேனை முகாங்களுக்குள் அடக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேனை, குறித்த இராணுவ முகாம் விட்டுச் செல்லுகின்றவேளை குறித்த நிலத்தை அகழ்கின்றபோது மேலும் இவ்வாறான எழும்பு துண்டுகள் அல்லது எரிக்கப்பட்ட டயர் துகழ்கள் கிடைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment