வரலாற்று சிறப்பு மிக்க சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் நேற்று சித்தாண்டி முருகப் பெருமானுக்கு ''ஆரோகரா'' எனும் பக்தர்களின் கோசத்துடன் பிரதம குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.
கந்த சஷ்டி விரத்தின் ஆரம்ப தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
முதலில் விநாயக பூசை இடம்பெற்றதும் சுபவேளையில் கும்பம் வைத்து, பின்னர் விரத பக்தர்களுக்கு கையில் அணிவதற்கு தெப்பை வழங்கப்பட்டதும், ஆறுமுகப் பெருமானுக்குரிய வசந்த மண்டப பூசை இடம்பெற்றது.
கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஐந்து தினங்கள் விழா நடைபெற்று ஆறாம் நாள் ஷண்முக அர்ச்சனையுடன் 2016.11.06 திகதி பாறணை பூசையும் அதைத் தொடர்ந்து மாலை திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.
சூரன்போர் எதிர்வரும் 05.11.2016 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறயிருப்பதாகவும் சூர சங்காரத்தினை அடுத்து அன்றைய தினம் மாலை இரவு ஆலய அலங்கார மேடையில் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
கந்த சஷ்டி விரத காலங்களில் சித்தாண்டி முருகப் பெருமானின் ஆலயத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து விரத பக்தர்கள் வருகைதந்து விரதத்தை அனுஸ்டிப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment