0
தேசியக் கொள்ளை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் முகாமின் இறுதி நாள் நிகழ்வு வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் விபுலானந்தா மண்டபத்தில் நேற்று(23.10.2016) மாலை நடைபெற்றது.

மேலும், மூன்று நாள் வதிவிடத்துடனான முகாமில் வினைத் திறன் கூடிய தீர்மானங்களை எடுத்தல், இலகுபடுத்தும் செயற்பாடு, ஆளுமை விருத்தியும் ஒன்றிணைதலும், தீ பாசறை , மென் திறன் விருத்தி உட்பட பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 12 கிராம சேவகர் பிரிவிலுள்ள இளைஞர்களின் வதிவிடத்துடனான மூன்று நாட்கள் முகாம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை மாலை சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடனும் இசை நிகழ்வுடனும் நிறைவு பெற்றது.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன தலைவரும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சம்மேளன தலைவருமான த.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் டிம்.நைறூஸ், கோறளைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எஸ்.நடேசன், வளவாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.









Post a Comment

 
Top