செங்கலடி மத்திய கல்லூரியில் 06.10.2016 பாடசாலை அபி - சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தின நிகழ்வானது மிக விமர்சையாக வித்தியாலயத்தின் அதிபர் கு.அருணாசலம் அவர்களின் தலைமையில் நடைபெற்று இருந்தன.அதிபர், பிரதி அதிபர் ,ஆசிரியர்களுக்கு மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் இதில் அப் பாடசாலை அதிபர் ,பிரதி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,
பழைய மாணவர்கள் என பலரும் கலந்து இன் நிகழ்வை சிறப்பித்திந்தனர்.
இன் நிகழ்வில் இவ் வருடத்திற்கான 2016 ஐனாதிபதி விருது பெற்ற இப் பாடசாலை ஆசிரியர் ஜெயலக்ஷ்மி வெள்ளைச்சாமி அவர்களின் கௌரவிப்பும் இடம்பெற்று
சர்வதேச சிறுவர் தின கலை நிகழ்வும் இப் பாடசாலை மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
மேலும் நிகழ்வில் அனைத்து ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment