கதை,கவிதை,நாடகம்,நடிப்பு,குறும்படஇயக்கம், பாடலாசிரியர்,பட்டிமன்றப்பேச்சாளர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல துறைகளில் தனது திறமையினால் பரிணமிக்கும் கலைஞர் அகரம் செ.துஜியந்தன்.
இவர் இம்முறை கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தினால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இருக்கும் இளங்கலைஞர் அரச விருதினை ஊடகத்துறைக்காகப் பெற்றுள்ளார்.
கல்முனை தழிழ்ப்பிரிவு பாண்டிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்தம்பி துஜியந்தன் 2001ஆம் ஆண்டு மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகை ஊடாக ஊடகத்துறைக்குள் நுழைந்தவர்.இன்று தேசியப்பத்திரிகைகள் பலவற்றில் பிராந்திய செய்தியாளராகவும் உள்ளார் மற்றும் சர்வதேச செய்திஇணையத்தளங்களில் பிரதான செய்தியாளராகவும் பணியாற்றிவருகின்றார்.
இத்துறையில் கடந்த 15வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவரும் இவர். ஊடகம் மூலம் சமய, சமூக, கலைமற்றும் கலாசாரப் பணிகளை முன்னெடுத்தும் வருகின்றார்
பத்திரிகைகள் வாயிலாக செ.துஷ்யந்தன்,துஜியந்தன் எனும் பெயர்களில் இதுவரை 160 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் 50 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 20 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளதுடன் ஞாயிறு தினக்குரல் பத்திரிகைஊடாக பின்தங்கியகிராமங்களுக்குச் சென்று அங்குள்ளமக்கள் படும் துயர்களையும் எழுதிவருகிறார். இவரின் இச் சேவைக்காக சிறந்த ஊடகவியளாலருக்கான விருதினை இரு தடவைகள் பெற்றுள்ளார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை ஆசிரியர் சங்கமும் இணைந்து ஊடகவியளாலர்களைக் கௌரவிக்கும் முகமாக வழங்கும் அதியுயர் விருதுவழங்கல் நிகழ்வில் 2012ஆம் ஆண்டிலும் 2013ஆம்ஆண்டிலும் சிறந்த சமூக அபிவிருத்திக்கான சுப்பிரமணியம் செட்டியார் விருதினை இரண்டு முறை வென்றுள்ளார். கிழக்கு மாகாணத்தில் இவ் விருதினை வென்ற முதல் ஊடகவியலாளர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
ஊடகத்துறை மட்டுமல்லாமல் கடந்த 05 வருடங்களாக குறும்பத்துறையிலும் தனக்கென ஒரு முத்திரையைப்பதித்துள்ள இவர் குறும்படங்களை தயாரிப்பது இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பது என இவரது பணி நீண்டு கொண்டே செல்கிறது. இதுவரை விமோசனம், விரட்டியடி, பாழாய்ப்போனபயணம், வட்டி, யார்பிச்சைக்காரன் என சமூக விழிப்புணர்வு குறும்படங்களைத் தயாரித்து இயக்கி நடித்தும் இருக்கிறார். இதில்சிறுவர் துஷ்பிரயோகத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய விரட்டியடி குறும்திரைப்படம் 2013இல்கிழக்குமாகாண சிறுவர் நன்னடத்தைப் பிரிவு நடத்திய குறுந்திரைப்படப் போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்று 50000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்பவர்களின் நிலை தொடர்பான “பாழாய்ப்போனபயணம்” குறும்படம் சக்திதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதுடன் அதில் சிறந்த நடிகருக்காய் பரிந்துரைக்கப்பட்டும் இருந்தார்.
அகரம் சமூக அமையம் எனும் அமைப்பு ஒன்றை ஸ்தாபித்து அதனூடாகப் பல்வேறு கலை இலக்கியப்பணிகளை முன்னெடுத்து வரும் இவர்; நூல் வெளியீடுகளைச் செய்வது, மாணவர்கள் மத்தியில் கவிதை,சிறுகதை, புகைப்படக்கலை, போன்ற துறைகளில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துதல்,இலக்கிய விமர்சனங்கள்,நூல் வெளியீட்டுரைகளை நிகழ்த்துதல்,கலைஞர்களைக் கௌரவித்தல் ஊக்கப்படுத்துதல் போன்றவைகளிலும் தெடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்.
மணிப்புறா எனும் காலண்டு இதழொன்றின் ஆசிரியராக இருந்து பல இளம் எழுத்தாளர்களுக்குச் சிறந்த ஒரு களத்தினைக் கல்முனை பிரதேசத்தில் உருவாக்கிக் கொடுத்த இவரை வளமையான பொருளாதாரப் பிரச்சினை அதனைத் தொடரமுடியாது தடுத்தது.
இவை தவிர கவிதை, சிறுகதை, நாடகம்ஆகிய ஆக்க இலக்கியச் செயற்பாட்டாளராகவும் படைப்புக்களை படைத்துவருகின்றார். அதுமட்டுமல்லாது அண்மைக்காலமாக பட்டிமன்றப் பேச்சாளராகவும் பரிமாணமெடுத்துள்ள இவர் அத்துறையில் பல்லாண்டு பரீட்சயமுள்ள தென்னிந்தியப் பேச்சாளர்களையும் மிஞ்சுமளவு தனது பயிற்சியாலும் ஆளுமையாலும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் அதிசயத்தை மட்டக்களப்பின் கலை இலக்கிய ஆர்வலர்கள் யாவரும் அறிவர்.
கலையிலக்கியம் மட்டுமல்லாது சமூக ஆன்மீக சேவையில் நாட்டம் அதிகம் கொண்ட இவரின்தன்மைக்கு அகரம் சமூக அமையம் சாட்சி சொல்லும் அவ் அமைப்பினுடாக பல்வேறு சமூகப் பணியினையும்ஆற்றி வருகின்றார்;. குறிப்பாக வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்குக் கரம்கொடுத்து வரும் இவர் வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வாழ்வாதாரஉதவிகளையும்; பெற்றுக்கொடுத்து வருகின்றார்.
சிரமதானப்பணிகள், வெள்ளநிவாரணப் பணிகள் சர்வதேசதினங்கள் உட்பட விழிப்புணர்வு நடவடிக்கையலும் மிக அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றார்.
சமயங்களுக்கிடையே நல்லுறவைக் கட்டியெழுப்பும் முகமாக மதத்தலைவர்களுடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டும் வருகின்றார். கடந்த 2005இல் இந்துசமயகலாசார அமைச்சு மற்றும் திணைக்கள மூடாக இந்தியா சென்று அங்கு வாழும்கலைப் பயிற்சி ஊடாக ஆன்மீகப் பயிற்சிகளைப் பெற்றுள்ளதுடன் “இந்துப்பிரச்சாரகர்” ;என்ற பட்டமும் இவருக்காக வழங்கப்பட்டது.இதன் மூலம் கிராமங்களில் ஆன்மீக விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாது தனது ஓய்வான நேரங்களில் அறநெறிப்பாடசாலைகளிலும் கற்பித்துக் கொடுத்து வருகின்றார்,பத்திரிகை ஊடாக ஆன்மீகக் கட்டுரைகளையும் எழுதிவரும் இவர் ஊடகத்துறைக்கான கிழக்குமாகாண சபையினால் இவ்வருடம் வழங்கப்பெறுகின்ற“இளங்கலைஞர்” விருதினைப் பெற்றமை அவ்விருது சரியான ஆழுமைமிக்க ஒருவரைச் சென்றடைக்கின்ற திருப்தியை நமக்குத் தருகின்றது.

Post a Comment