நாட்டில் நல்லாட்சி நடக்கிறது எல்லோரும் சமாதானமாக, சுதந்திரமாக வாழ்கிறோம் என்று கூறும் அரசாங்கம் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிஸாரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின்தமிழர்களை நியாயமாக நடத்துகிறீர்கள் என்பதை சர்வதேசத்துக்கு காட்ட முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய கொள்ளை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் முகாம் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில்நேற்று(23.10.2016) மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய இளைஞர் சேவை மன்றமானது இளைஞர்களை சக்திமிக்கவர்களாக உருவாக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பானது 1965ஆம் ஆண்டு முதல் சேவைகளை வழங்கி வருகிறது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் இளைஞர்களுக்கான அனைத்து வலுவூட்டல்களும் சிறப்பாக நடத்தப்பட்டது.
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்பு இளைஞர் விவகார அமைச்சராக இருந்தார். இளைஞர் சேவைகள் மன்றம் முன்னிலையாக நாட்டில் பெரும் மதிப்பினைப் பெற்றிருந்தது. இளைஞர்கள் பல சாதனைகள் படைத்தார்கள்.
வடக்கு கிழக்கிலே பல இளைஞர் பயிற்சி முகாம்கள் இருந்தன. இந்த நிலை சில காலங்களில் மாறியிருந்தாலும் தற்போது புத்துணர்வு பெற்றுள்ளது.
இளைஞர் கழகங்கள் அரசியல் ரீதியில் செயற்பட ஆரம்பித்ததை இளைஞர்களை பாதகமான செயற்பாட்டிற்கு கொண்டுசென்றது. முற்று முழுதாக அரசியல் நடவடிக்கை புகுந்து இளைஞர் யுவதிகள் அரசியலை மையமாக கொண்டு செயற்படுத்தப்பட்டார்கள். உத்தியோகத்தர்கள் அதன் மத்தியில் நியமிக்கப்பட்டதால் நாட்டுபற்றுடன் கூடிய இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதில் பாரிய சவால் ஏற்பட்டது. ஆனால் இன்று இந்த நிலமை மாற்றமடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்த காலங்களில் நிறைய உதவிகள் வந்தன அந்த உதவிகள் எங்கு சென்றதென தெரியாது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு வழங்கப்பட்ட பஸ் வண்டி கூட மாயமாய் போயுள்ளது.
நாட்டில் தற்போது யுத்தம் இல்லை எவரும் எங்கேயும் சென்று வரலாம். நல்லாட்சி நடைபெறுகிறது என்ற நிலை காணப்படும் போது சிவில் நிருவாகத்தைக் கொண்டு நடத்தும் பொலிஸாரால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறகக்கூடாது. தொடர்ந்து எங்களது மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முயாது.
நாட்டில் நல்லாட்சி நடக்கிறது எல்லாரும் சமாதானமாக சுதந்திரமாக வாழ்கிறோம் என்று கூறும் அரசாங்கம் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிஸாரின் மீது சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் தமிழர்களை நியாயமாக நடத்துகிறீர்கள் என்பதை சர்வதேசத்துக்கு காட்டமுடியும்.
இன்றைய சூழலில் எங்களது இளைஞர் சமூகம் பெரும் பின்னடைவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் மதுபானம் மற்றும் சிக்கிரட் பாவனையில் ஈடுபடுகிறார்கள். மதுபாவனையில் எமதுமாவட்டத் முன்னிலையில் உள்ளது. 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டிய மாவட்டதில் 69 மதுபானசாலைகள் உள்ளன.
யுத்தத்தின் பின்னர் தங்களை சுயதொழிலில் ஈடுபடாமல் அரச தொழிலினை எதிர்பார்த்திருப்து தங்களுக்கு கிடைக்கின்ற சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் வளர்த்துக் கொள்ளாததன் காரணமாக எமது மாவட்டம் வறுமையில் முன்னிலையில் உள்ளது.
மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் தமது சுய முயற்சியால் தங்களது பொருளாதாரத்தை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகின்றேன். ஆனால் தமிழர்கள் நிவாரணம் பெறுவதில் முதன்மையாகஉள்ளனர். நாங்கள் யகயேந்தும் சமூகமாக தொடர்தும் வாழக்கூடாது என்றார்.

Post a Comment