மக்களிடையே வாசிப்பு குறைவடைந்து செல்வதினால் எமது சமூக வளர்ச்சியும் குறைவடைந்து செல்கிறது. வாசிப்பு குறைவால் ஞாபக சக்தியும் குறைவடைந்து செல்கிறது என கிழக்கு மாகாண சபையின் உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசபையின் வாழைச்சேனை பொது நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் 2016 ஐ முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வாசிப்பின் மகத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் புத்தகக் கண்காட்சி இன்று(21.10.2016) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போது எம்மத்தியில் நவீன கண்டு பிடிப்புக்களின் தொழில் நுட்பம் காரணமாக மாணவர்கள் அதன் பக்கம் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். இதனால் நூலகம் சென்று தமக்கு தேவையான தகவல்களை பெறுவதில் மாணவர்கள் மட்டுமல்லாது ஏனையோரும் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
செய்திகளை பார்வையிடுவதற்கு பத்திரிகைகள் உதவிய காலம் போய் தற்போது இலத்திரனியல் சாதனங்களின் வருகையினால் தகவல்களை வீட்டில் இருந்து பார்க்கின்ற காலம் வந்துள்ளது.
கடந்த காலங்களில் மக்கள் அரசியல் வாதிகளிடம் சனசமூக நிலையத்திற்கான கட்டடம் கட்டி தாருங்கள் என்று கோரிக்கை விடுப்பார்கள்.
அவ்வாறான நிலைமை போய்விட்டது. அத்துடன் ஞாபக சக்தியும் மக்களிடையே குறைவடைந்து செல்கிறது.
கைத்தொலைபேசியின் வருகையினால் வாகன இலங்கங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் தொலை பேசியிலேயே பதிவு செய்து வைக்கின்றோம்.
எனவே நூலகம் சென்று நூல்கள் வாசிப்பதனை தூண்டும் முகமாக ஒரு சமூக பொறுப்புடன் எல்லோரும் சிந்தித்து செயற்பட முன்வரவேண்டும்.
வாசிப்பு பழக்கத்தினால் மனிதனின் மனம் மகிழ்ச்சியடைவதுடன் மூளைக்கும் ஒரு வளர்ச்சியாகும். எனவே நூலகம் சென்று வாசிப்பதனை மாணவர்கள் மற்றும் வாசகர்கள் ஒரு பழக்கமாக கொள்ள வேண்டும். இதன் மூலம் சிறந்த சமூகத்தினை எம்மத்தியில் உருவாக்க முடியும் என்றார்.

Post a Comment