0


உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரி விழாவானது மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறுகின்றது.

இன் நிகழ்வையொட்டி அக்டோபர் 10 2016 மட்டக்களப்பு வந்தாறுமூலை  மட்/ககு/வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்திலும் வாணி விழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பஜனை, மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான வாணி விழாவானது தொடர்ந்து வந்தாறுமூலை மருங்கையடி பிள்ளையார் ஆலய பிரதம பூசகர் அவர்களால்  சரஸ்வதிக்கு பூஜைகள் நிகழ்த்தப்பட்டு ஆசிரியர் மாணவர்களால் சகலகலாவல்லி மாலை மற்றும் தேவாரம் பாடப்பட்டு இறுதியாக பிரசாதம் வழங்கப்பட்டு நிகழ்வானது நிறைவெய்தியது.

இவ் விழாவில் இப் பாடசாலையின் அதிபர் தா.சித்திரவேல் அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.













Post a Comment

 
Top