கிழக்கு மாகாண சுகாதார திணைக்களங்களில் கடமையாற்றும் பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளார் கே.கருணாகரன் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் பிராந்திய வைத்திய பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் பதவி நிலை முத்திரைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Post a Comment