உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைய கிருஷ்ண ஜெயந்திப் பெருவிழாவை சிறப்பிக்கும் முகமாக வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தினரும்,கிருஷ்ண பக்தர்களும் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான நிகழ்வு வந்தாறுமூலை வாசிகசாலை கட்டடத்தில் 25.08.2016 வியாழக்கிழமை சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வானது காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகி பி.ப .03.00 மணியளவில் நிறைவுபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் S.W.P.A.A டமயந்தி உட்பட வைத்திய ஊழியர்கள் பங்கேற்று இரத்த தான நிகழ்வினை நடாத்தி வைத்தனர்.
இதில் 50க்கும் மேற்ப்படட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பெறுமதிமிக்க இரத்தத்தினை தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது



Post a Comment