செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குமாரவேலியார், மற்றும் ஆறுமுகத்தான் குடியிருப்பு போன்ற பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் செங்கலடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் (அமல்) அவர்களால் இன்று (30.07.2016) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
596 குடும்பங்கள் வரையில் வசிக்கும் குமாரவேலியார் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள பொது மயானத்தில் இருந்து வெளியேறும் ஊற்று நீர் காரணமாக இதனை அண்டியுள்ள வீடுகளின் நீர் மாசடைந்து காணப்பட்டது. இதன்படி இதற்கான உடனடித்தீர்வாக முதல் கட்டமாக 150 குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஆறுமுகத்தான் குடியிருப்பு-01 இல் 253 குடும்பங்களும், ஆறுமுகத்தான் குடியிருப்பு -02 இல் 699 குடும்பங்களுமாக மொத்தம் 952 குடும்பங்கள் வரையில் இத்திட்டத்தின் ஊடாகப் பயன்பெறவுள்ளனர்.

Post a Comment