202 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 202ஆவது ஆண்டு கல்லூரி தினம், 200ஆவது ஆண்டு நினைவு மலர் வெளியீடு நிகழ்வில் மட்டக்களப்புக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
202 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கலந்து கொண்டு இப்பாடசாலையின் ஆரம்ப கர்த்தாவும் நிறுவுனருமான வில்லியம்ஸ் அவர்களின் நினைவாகவும், 2002ஆவது ஆண்டு நினைவாகவும் பழைய மாணவர்கள் சங்கத்தின் நிதியில் அமைக்கப்பட்டுள்ள தூபியினை திறைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.
பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் , 200ஆவது ஆண்டு நினைவு மலரின் முதல் பிரதியினை அதிபர் ஜனாதிபதியிடம் வழங்கி வெளியிட்டுவைத்தார். அதனையடுத்து பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரனால் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் இணையத்தளத்தினையும் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
அதனையடுத்து பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், அதிபர் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் பாடசாலையிலுள்ள குறைபாடுகள் தேவைகள் குறித்து அதிபர் காரியாலயத்தில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது குறைகளையும் தேவைகளையுமு; கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி இவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
202வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு வரலாற்றுப் பாரம்பரியங் கொண்ட பாடசாலையாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அமைந்திருந்தாலும், பல்வேறு குறைபாடுகளுடன் இப்பாடசாலை இயற்கி வருவதாலும், இடவசதிப்பிரச்சினையில் முக்கியமாக பாடசாலை இரண்டு பகுதிகளாக இடையில் வீதியுடன் காணப்படுவதனால் இந்த வீதியை மூடி பாடசாலைக்கான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதி தமது கல்லூரிக்கு அழைக்கப்பட்டதாக பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 202ஆவது ஆண்டு கல்லூரி தின, 200ஆவது ஆண்டு நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் தலைவர் அருட்திரு ஆசிரி பி பெரேரா, வடக்கு கிழக்கு மாகாணத் தலைவர் அருட்திருஎஸ்.எஸ்.ரெரன்ஸ் , பிரதேச பிரமுகர்கள், பா டசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர் பமற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment