மாணிக்க கங்கையில் நீராடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மொனராகலை மாவட்ட செயலாளர் டீ.ஏ.பத்மகுலசூரிய கதிர்காம யாத்திரைக்கு வரும் பக்தர்களிடம் கோரியுள்ளார்.
கதிர்காமம் உற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் , தற்போதைய நிலையில் அநேகமான பக்தர்கள் கதிர்காமம் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , மாணிக்க கங்கையில் நீராடிய நபர் ஒருவர் நேற்று இரவு முதலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
மெதிரிகிரிய - திவுலன்கடவல விகாரகம பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரின் காலின் ஒரு பகுதி முதலையினால் கடித்து துண்டாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
பக்தர்களுக்காக தன்சல் வழங்குவதற்காக கதிர்காமம் வந்த இவர் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment