0
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய சாரணர் மாணவர்களுக்கு  சின்னஞ்சூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது . கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மாணவர்களுக்கு இரண்டாவது முறையாக சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் . எ  .ராசு தலைமையில்  இன்று பாடசாலையில் இடம்பெற்றது பாடசாலை மட்டத்தில் சாரணர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களுக்கு  பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு சின்னங்கள் சூட்டப்பட்டது .    இதன்போது  06 சாரணர்களும்  இரண்டாவது முறையாக சின்னஞ் சூட்டும் நிகழ்வும்  22  புதிய சாரண மாணவர்களுக்கும்  சின்னஞ்சூட்டப்பட்டு கழுத்துப்பட்டி அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது   இந்நிகழ்வில்  உதவி மாவட்ட சாரண ஆணையாளர் என் . நாகராஜா , பாடசாலை சரண ஆசிரியர்கள் , சாரண மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்
 






























Post a Comment

 
Top