ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் ப.டன்ஸ்ரன் அவர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்குடா கல்வி வலயத்தின் ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வந்த பஸ்தியாம்பிள்ளை டன்ஸ்ரன் 31.05.2016 அன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை வங்கியில் பணிபுரியும் மகன், ஆசிரியையான மனைவி இருவரையும் வழியனுப்பி விட்டு கடமை நிலையத்திற்கு சென்றதாகவும் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
1962.05.17ஆம் திகதி பிறந்த டன்ஸ்ரன் அவர்கள் 1988இல் ஆங்கில ஆசிரியராகவும் பின்னர் 2000ஆம் அண்டு ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராகவும் நியமனம் பெற்றார். சிறந்த ஆங்கிலப் புலமையும் ஆங்கிலத்திற்கே உரித்தான பண்புகளையும கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment