0
மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு, த.அன்ரனி பொன்சேகா தலைமையில் நேற்று விஸ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற 2016ம் ஆண்டுக்காக விளையாட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன், தவிசாளர் பொன்.செல்வநாயகம், கல்குடா வலய பாலர் பாடசாலைகளின் இணைப்பாளர் கோ.ஜீவாகரன், ஓய்வு பெற்ற அதிபர் வ.கந்தசாமி மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலையின் மாணவர்களினால் மிகவும் சிறப்பான முறையில் அதிதிகள் அழைக்கப்பட்டதும், மைதானத்தில் ஒலிம்பிக் தீபம் ஏற்றல், உடற்பயிற்சி கண்காட்சி, பாலர் திறனாய்வு நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றது.
செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட பகுதியில் பல பாலர் பாடசாலைகள் காணப்பட்டாலும் வந்தாறுமூலை மாருதி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஏனைய செயற்பாடுகள் கடந்த காலங்களில் இருந்து திறன்பட நடைபெற்று வருகின்றமை பாடசாலையின் முதல் வளர்ச்சிப்படியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



























Post a Comment

 
Top