மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(30) வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை தலைமையில் நடைபெற்றது.
நாற்பத்தொன்பது இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லினை கிழக்கு மாகாண விவசாய, கூட்டிறவு, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பிரதி தவிசாளருமாகிய இ.பிரசன்னா, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மற்றும் உத்தியோகத்தர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து நாட்டி வைத்தனர்.
Post a Comment