0
மட்டக்களப்பு விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் தேவஸ்தான நவகுண்ட மஹா கும்பாபிஷேக கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (01) மாலை மங்கள கிரியாரம்பத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

02.07.2016 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (03) களில் கிரியைகள் இடம்பெற்று மறுநாள் திங்கட்கிழமை (04) கிழக்குப் பிராந்தியத்தில் முதல் ;முதலாக 6 அடி உயரமான கருங்கல்லில் செதுக்கப்பட்ட திருவாசியுடன் கூடிய வீரமாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

05.07.2016 செவ்வாய்க்கிழமை (05) புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட முல மூர்த்தியாகிய ஸ்ரீ வீரமாகாளியம்மன் மற்றும் பரிபால மூர்த்திகளான பிள்ளையார், நாகராஜா,மாரியம்மன் தெய்வங்களுக்கு காலை 7.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

06.07.2016 புதன்கிழமை (06) புதிததாக பிரதிஷ்டை பண்ணப்பட்ட சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்று 24.08.2016 புதன்கிழமை சங்காபிஷேகம் இடம்பெறும்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீ. யோகேஸ்வரன் கலந்து கொள்வார்.

கும்பாபிஷேகக் கிரியைகளை பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் தலைமையில் குருமார்கள் நிகழ்த்துவர்.

Post a Comment

 
Top