0
மட்டக்களப்பு சிவானந்தா தேசியபாடசாலையின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்புவிழா வெள்ளிக்கிழமை 01.07.2016 பி.ப 02.30மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் நடைபெறும் இப்பரிசளிப்புவிழாவிற்கு ஆத்மீக அதிதியாக மட்.இராமகிருஸ்ண மிஷன் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தா ஜீ மகராஜ் அவர்களும் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்னன் அவர்களும் கௌரவ அதிதிகளாக கல்வி அமைச்சின் தமிழ் பிரிவுபணிப்பாளர் எஸ்.முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயவலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கியபராமரிப்பு பீடாதிபதி வைத்தியர் கே.ரி.சுந்தரேசன் அவர்களும் 
விசேட அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எந்திரி எம்.மங்களேஸ்வரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டுசிறப்பிக் உள்ளனர்.

Post a Comment

 
Top