தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவருமான ச.வியாழேந்திரன் தன் மீது சில முதுகெலும்பு அற்ற இணையங்கள் சேறு பூச முனைகின்றது என தனது அறிக்கையில் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார் .
அவர் தனது அறிக்கையில் தெரிவிக்கையில்.
நேற்றைய முன்தினம் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யப் போவதாக தவறான செய்திகளை பிரசுரித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்ப்பட்டுத்துவது வேதனை அளிக்கின்றது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் முன்னின்று செயற்படுவதை சில விசக்கிருமிகள் பொறுக்க முடியாமல் இவ்வாறு தவறான செய்திகளை பிரசுரிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்
இப்படி பட்ட தவறான செய்திகளை பிரசுரிப்பவர்கள் என்னிடம் நேரில் வந்து பேசியிருக்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர் கொள்ளும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன அவையெல்லாம் விட்டு விட்டு தேவைக்கு அற்ற விடயங்களில் இந்த இணையங்கள் செயற்படுகின்றன.
இவ்வாறான தவறான செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் மென குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பக்கச்சார்பான ஊடகங்கள் உண்மையை எழுத வேண்டுமெனவும் இந்த தவறான செய்தியை பிரசுரித்த இணையத் தளம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment