0
மட்டக்களப்பு சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகமும், கிராம மக்களும் இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு விழா சந்திவெளி பொது விளையாட்டு மைதானத்தில்  30.04.2015 அன்று நடைபெற்றது.

கழக தலைவர் அ.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்,ஞா.கிருஸ்ணப்பிள்ளை, இரா.துரைரெட்ணம், மா.நடராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், கல்குடா வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, சந்திவெளி கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி.பீ.மேகலா, சந்திவெளி சித்தி விநாயகர் மகா வித்தியாலய அதிபர் மா.தவராசா, பிரதேச பிரமுகர்கள் மற்றும்  பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கோட்டம், தலையணைச் சமர், ஆண், பெண்களுக்கான முட்;டி உடைத்தல், சாப்பாட்டு ராமன், கிடுகு பின்னுதல், ஆண், பெண்களுக்கான கயிறு இழுத்தல், மெதுவான மோட்டார் சைக்கிள் ஓட்டம், உட்பட பல நிகழ்வுகள் நடைபெற்றது.

இதேவேளை இங்கு நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற, சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள், ஈரான் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்ற கிரான் கருணா விளையாட்டுக் கழக வீராங்கனை செல்வி ராசா கஜேந்தினி ஆகியோர் அதிதிகளால் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







Post a Comment

 
Top