0
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட பேரணி மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமாகி நகரின் பிரதான வீதிகளுடாக சென்று மட்டு தேவநாயகம் மண்டபத்தை சென்றடைந்தது.

இப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் தொழிற் சங்கங்களும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  தொழிற்ச்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


























Post a Comment

 
Top