0
இரு­ப­துக்கு 20 உலக கிண்ணத் கிரிக்கெட் போட்­டியின் முடிவின் அடிப்­ப­டையில் அணி­க­ளின்­ தர வரி­சைப்­பட்­டி­யலை ஐ.சி.சி. வெளி­யிட்­டுள்­ளது.

இந்தப் பட்­டி­யலில் இலங்கை அணி 105 புள்­ளி­க­ளுடன் 8ஆவது இடத்தில் இருக்­கி­றது. உலகக் கிண்­ணத்தில் அரை இறு­தியில் தோல்வி கண்டு வெளி­யே­றிய இந்­திய அணி (126 புள்­ளிகள்) முத­லி­டத்தில் நீடிக்­கி­றது.

உலகக் கிண்­ணத்தை வென்ற மேற்­கிந்­தியத் தீவுகள் (125 புள்­ளி கள்) 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்­துக்கு முன்­னேறி இருக்­கி­றது. நியூ­ஸி­லாந்து அணி (120 புள்­ளிகள்) ஒரு இடம் பின்­தங்கி 3ஆவது இடத்தைப் பெற்­றுள்­ளது.

முறையே இங்­கி­லாந்து, தென்­னா­பி­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்­கா­னிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் இருக்­கின்­றன.
துடுப்­பாட்ட வீரர்கள் தர­வ­ரி­சையில் இந்­திய அணியின் துணைத் தலைவர் விராட் கோஹ்லி (889 புள்­ளிகள்) முத­லி­டத்தில் நீடிக்­கிறார்.

அவுஸ்­தி­ரே­லியாவின் பிஞ்ச் (803 புள்­ளிகள்), நியூ­ஸி­லாந்தின் குப்தில் (754 புள்­ளிகள்), இங்­கி­லாந்தின் ஜோ ரூட் (750 புள்­ளிகள்), தென்னாபிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் (741 புள்­ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 5 இடங்­களில் உள்­ளனர்.

பந்து வீச்­சா­ளர்கள் தர வரி­சையில் மேற்­கிந்­தியத் தீவுகளின் வீரர் சாமுவேல் பத்ரீ (790 புள்­ளிகள்) முத­லி­டத்தில் தொடர்­கிறார். தென்­னா­பி­ரிக்காவின் தாஹீர், இந்­தியாவின் அஷ்வின் 2ஆம் 3ஆம் இடங்களில் உள்ளனர்.

Post a Comment

 
Top