சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Laubbach என்ற பகுதியில் நேற்று முன் தினம் மாலை 6.15 மணியளவில் கார் ஒன்று பயணித்துள்ளது.
சாலையில் சென்றுக்கொண்டு இருந்த அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது.
பள்ளத்தில் விழுந்த அந்த கார் அவ்வழியாக சென்ற ரயில் தண்டவாளத்தின் மீது பாய்ந்து பல முறை உருண்டுள்ளது. எனினும், இந்த விபத்தில் 34 வயதான ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அவ்வழியாக செல்ல வேண்டிய ரயில்களை தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
பின்னர், தண்டவாளத்தில் கிடந்த காரை அகற்றி அப்பகுதியை சீர்ப்படுத்தியுள்ளனர்.சாலையில் சென்ற கார் எதனால் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து தெரியவராத நிலையில், விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் அந்த காரை பழுது பார்க்க ஆயிரக்கணக்கான பிராங்குகள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment