0
இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விமானம் 153 பயணிகளுடன் புறப்பட ஆயத்தமாகி ஓடு தளத்திற்கு வந்த போதே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டனர்.
தொழில் நுட்பவியலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க, விமானம் புறப்படுவதற்கான நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை விட மூன்று மணிநேரம் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்க நேர்ந்துள்ளது.

Post a Comment

 
Top